ஜூடோ ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு தங்கம்

ஜூடோ ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லின்தோய் சினம்பரம் 57 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.   இன்றைய விளையாட்டு செய்திகளின் தொகுப்பு அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்ட…

ஜூடோ ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லின்தோய் சினம்பரம் 57 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.  

இன்றைய விளையாட்டு செய்திகளின் தொகுப்பு

அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்ட 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த வருடம் சீனாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகின்ற செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று இன்னும் பல நாடுகளில் குறையாத காரணத்தால், அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் போட்டிகளை நடத்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பு கழகம் முடிவு செய்துள்ளது. கடந்த 2 மாதங்களாகவே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலில், தற்போது ஒருமனதாக முடிவெடுக்க பட்டு, வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சீனாவின் ஹாங்சோ நகரில், வரும் வருடம் 2023 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி போட்டிகள் துவங்கப்பட்டு, அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை நடத்தப்படும் என ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பு கழகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு தங்கம்

பேங்காக்கில் நடைபெற்று வரும் ஜூடோ ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லின்தோய் சினம்பரம் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லித்தோல் சினம்பரம் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்தது.

மங்களூர் சென்றடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று கர்நாடக மாநிலத்தின் மங்களூருவை சென்றடைந்தது. கடந்த 19 ஆம் தேதி இந்தியாவின் 75 முக்கிய நகரங்களுக்கு பயணமாக துவங்கிய செஸ் ஒலிம்பியாட் ஜோதி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருக்கு எடுத்து செல்லப்பட்டது.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்; அவினாஷ் சப்லே ஏமாற்றம்

ஒரேகனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே 3000 மீட்டர் தடையோட்டத்தில் 11 வது இடம் பிடித்ததை அடுத்து, பதக்கம் ஏதும் வெல்லாமல் வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சவுபியேன் எல் பக்கலி உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் தங்கம் வெல்லும் கென்யா வீரர் அல்லாத வட ஆப்ரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார் சவுபியேன் எல் பக்கலி.

3000 சர்வதேச டெஸ்ட் ரன்களை கடந்தார் பாபர் ஹசாம்

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஹசாம் முதல் இன்னிங்சில் 119 ரங்களும் இரண்டாவது இன்னிங்சில் 55 ரன்களும் சேர்த்தார். இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் மற்றும் மகளிர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது அமெரிக்கா மகளிர் கால்பந்து அணி

அமெரிக்கா மகளிர் கால்பந்து அணி நடப்பாண்டின் CONCACAF w கோப்பையை கைப்பற்றி 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் 2023 ஆம் ஆண்டின் பிபா மகளிர் உலக கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் கனடாவை வீழ்த்தி, அமெரிக்கா மகளிர் காலந்து நடப்பாண்டு CONCACAF w கோப்பையை கைப்பற்றியது.

உலக கோப்பை துப்பாக்கி சுட்டுதல்; இந்தியாவுக்கு வெண்கலம்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் கழகம் நடத்தும் துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில், இந்திய வீராங்கனை ரிதம் சிங் மற்றும் வீரர் சங்வான் ரிதம் ஆகியோர் 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

ஆசிய யூத் மற்றும் ஜூனியர் கேம்ஸ்; இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் தனுஷ் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய யூத் மற்றும் ஜூனியர் கேம்ஸ்; இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில், மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஷாடா கருட் 45 கிலோ எடைப்பிறிவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 157 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை ஹர்ஷாடா கருட்

முனிச் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர்; இந்தியாவுக்கு இரண்டு வெண்கல பதக்கம்

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல். போட்டியில் இந்தியாவின் குழுவான தீபேந்தர், ராகுல், அனுரோத் உள்ளிட்டோர் 10 மீட்டர் SH 1 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அதே போல 10 மீட்டர் SH 1 ஒற்றையர் பிரிவில் தீபேந்தர் சிங் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

ஐசிசி உலக கோப்பை தகுதிப்போட்டிகளின் சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி கிரிக்கெட் அணி

ஐசிசி உலக கோப்பை தகுத்திப் போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி கிரிக்கெட் அணி. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐல் ஆஃப் மேன் அணியுடன் மோதிய இத்தாலி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, ஐசிசி உலக கோப்பை தகுதி போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.