பத்திரிகையாளர்களுக்கு என்றும் துணை நிற்போம் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.