GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலரவம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே கடந்த 10-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே காணப்பட்டது. இன்டர்ன் காரணமாக நேற்று தங்கம் ஒரு சவரன் ரூ.1,00,920-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.12,615-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,540-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.