நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
20160-ல் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் சீமானுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கில் இன்று ஆஜரான சீமானை மீண்டும் பிப்ரவரி 16-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி எழும்பூர் 14-வது நீதிமன்ற நடுவர் பாலசுப்பிரமணி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரிட்டிஷ் கட்டடங்கள் இன்றைக்கும் நிலைத்து நிற்கும்போது, திருவொற்றியூர் கட்டடத்தின் தன்மை இப்படி இருப்பதற்கு ஆட்சியாளர்களின் தவறு என குற்றம்சாட்டினார்.
மேலும், 7 தமிழர்கள் விடுதலையில் திமுகவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பு ஒன்றாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு வேறு விதவாக இருப்பதாகவும் அவர் சாடினார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அதற்கு தாங்கள் தயாராகி வருவதாகவும் சீமான் தெரிவித்தார்.








