“தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடி உருவாக்க வேண்டும்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடி உருவாக்க வேண்டும் அதனை முதலமைச்சர் ஏற்றி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

தமிழ்மொழியை யாரும் காப்பாற்ற வேண்டாம்; தமிழை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை; தமிழ் மொழிதான் நம்மை பாதுகாத்து வருகிறது. நம்மை உருவாக்கியதுதான் மொழி. எல்லா மாநிலங்களுக்கும் மாநிலக் கொடி உள்ளது. நாமும் நமக்கான கொடியை உருவாக்க வேண்டும்; தமிழ்மொழியை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்க வேண்டும்.

English Medium படித்தால் தான் வேலைக்கு போக முடியும் என்ற கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்; இருமொழி கொள்கை நமக்கு முக்கியம். அன்னைத் தமிழை விட்டு ஆங்கிலம் பேசும் பெருமையை நாம் மாற்ற வேண்டும், “ என்று அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.