முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நாங்கள் தனித்து போட்டியிட தைரியம் உள்ளவர்கள் – சீமான்

தமிழ்நாட்டில் யாருக்கும் தனித்து போட்டியிட தைரியம் இல்லை என்றும், ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217- வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் மாலை அணிவித்து, புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதை செயல்படுத்துவது தான் அவருக்கு தரும் உண்மையான மரியாதை என புகழாரம் சூட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பெரியார் மண், அண்ணா மண் என்று சொல்லி கொண்டு எதையும் செய்யாமல் உள்ளனர். பெரியார் இருப்பார். ஆனால் மண் இருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை சாடி பேசியது குறித்து பதிலளித்த சீமான், ஜெயக்குமாருக்கு பணகொழப்பு நிறைந்துள்ளதாகவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 

தன்னை எதிர்த்து பேசும் ஜெயக்குமாரால், பாஜக-வை எதிர்த்து பேச முடியுமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். நீங்கள் பணத்தை முன்னிறுத்துகிறீர்கள். நாங்கள் மானமுள்ள இனத்தை முன்னிறுத்துகிறோம். தனித்து போட்டியிட யாருக்கும் திராணி இல்லை. அதிமுக, திமுக, பிஜேபி என யாருக்கும் தனித்து போட்டியிட திராணி இல்லை ஆனால் எங்களுக்கு உள்ளது. நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்றால் மக்களை நம்ப வேண்டும் நீங்கள் மக்களை நம்பவில்லை.

உறுதியான கோட்பாடு இருந்தால் அதை வைத்து மக்களிடம் வாக்கு கேளுங்கள். ஆனால் அது உங்களிடம் இல்லை கோடிகள் தான் உள்ளது. திராவிடம் என்றால் என்ன என விளக்கம்
சொல்ல முடியாத கோட்பாட்டை கொண்டிருக்கிறார்கள். நாட்டையே அதானி அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர். பிரதமர் மோடி டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என சாடினார்.

 

5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள். அனைத்திற்கும் விலை உயர்த்தி உள்ளனர். ஜிஎஸ்டியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்கள். எதற்கு இங்கிருந்து வாங்குகிறீர்கள். அப்புறம் எதற்கு நீங்கள் திரும்ப கொடுக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு தனக்கென நிதி வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு ஏதாவது வைத்துள்ளதா? எல்லாமே தனியார் மயமாகி விட்டது. மத்திய அரசுக்கு என்று தனியாக நிதி உள்ளதா? மாநிலங்களின் வரி வருவாயை வாங்கித் தான் மத்திய அரசு நிதி பெறுகிறது என சீமான் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

Web Editor

கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் உத்தரவு

EZHILARASAN D

தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி பேரிடர் நிதிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

Niruban Chakkaaravarthi