எங்களுக்கு ஈரோட்டில் எதிரியே இல்லை , வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என
அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”அதிமுகவினுள் உள்ள பிரட்சனையே தீர்க்க முடிய வில்லை இவர்கள் மக்களுக்கு என்ன
செய்ய போகின்றனர். எங்களுக்கு தேர்தல் நேரத்தில் என்ன பணி குழு வை அமைக்க வேண்டுமோ அதை தான் அமைத்து உள்ளோம் அது போதும்,
அவர்கள் பயத்தில் உள்ள ஆட்கள். அவர்கள் பலதும் செய்வார்கள் அது குறித்து நாம்
கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு ஈரோட்டில் எதிரியே இல்லை , வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டன.
செல்லூர் ராஜு எங்களை ஆதரித்தா பேசுவார் , விலை வாசி உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, அதுவும் மக்களை பாதிக்காத அளவில் தான் இந்த அரசு உயர்த்தி உள்ளன.
இதில் உள்ள உண்மையை அவர்கள் மறைத்து பேசுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக வரி உயர்த்தப்பட வில்லை, மத்திய அரசு கூறிய வரியை உயர்த்தினால் தான் மானியம் தருவோம் என்று நிபந்தனை போட்டுள்ளனர்.
பாஜகவும், சனாதனவாதிகளும் முதலாளித்துவத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர். இன்று அதானி குழுமம் ஏற்படுத்தி உள்ள இந்த பிரட்ச்சனை கோடான கோடி மக்களை
அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன. எனவே மத்திய அரசு இதனை மக்களுக்கு தெளிவு படுத்த
வேண்டும்.” என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
– யாழன்