சேலத்தில் இன்று சர்வதேச பூனைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பூனை வகைகள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வீட்டு வளர்ப்பு பிராணிகளின் பட்டியலில் நாய் , ஆடு, மாடு மற்றும் பறவைகளைப் போன்று பூனையும் ஒன்று. பூனைகள் வளர்ப்பதற்கு எளிதாகவும், குழந்தைகளோடு விளையாடுவதற்கு ஏதுவாக இருப்பதாகவும் பூனை வளர்ப்பவர்களால் சொல்லப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் நாய்க்கு அடுத்ததாக பூனையையே வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்வதேச அளவில் பூனைகளின் நலனுக்காக பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் முதல்முறையாக தமிழகத்தில் பூனைகளின் நலனுக்காக ஹூரைரா கேட் பிரான்சிஸ் அமைப்பை துவங்கி உள்ளனர். இதன் மூலம் பூனை உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்களின் வசமுள்ள பூனைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வம்சாவளி பாதுகாத்தல், பூனை குறித்த ஆராய்ச்சி ம்
மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டுப் பூனைகளின் நலனுக்காகவும், தமிழ்நாட்டுக்கென பிரத்யேகமாக பூனை வம்சாவளி பதிவேடு மற்றும் சர்வதேச அங்கீகாரம் என பல்நோக்கு பார்வையில் பல சேவைகளை இந்த பூனைகள் நல அமைப்பினர் தருகின்றனர்.
இதன் அடிப்படையில் இன்று ஹுரைரா கேட் ஷோ எனும் பெயரில் பூனைகள் கண்காட்சி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பூனைகளின் இனங்களையும் அடையாளம் காணவும் அவற்றை பதிவு செய்யவும் மைக்ரோ சிப் வழங்கவும் மற்றும் அவற்றின் இனச் சான்றிதழ்களை வழங்கும் பல அம்சங்கள் இந்த கண்காட்சியில் நடைபெறுகிறது .மேலும் பூனைக் கண்காட்சியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறும் பூனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை சர்வதேச நடுவர்கள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூனை கண்காட்சியில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பூனைகள் பெர்சியன் (PERSIAN) பூனைகள், லாங் ஹேர் பூனைகள்(Traditional Long Hair) மற்றும் எக்ஸோடிக் வெரைட்டி(EXOTIC BREED- Maine coon, Bengal, British Short Hair) பூனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலந்து கொண்டது. சேலத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச பூனைக் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
– யாழன்