சமீபத்தில் சாம்சங் நிறுவனம் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் சமீபத்தில் தனது சமீபத்திய கேஜெட்டை அறிமுகப்படுத்தியது. அதிக ஸ்டோரேஜ் சேமிப்பிடத்தை கொண்ட போர்ட்டபிள் சாலிட்-ஸ்டேட் டிரைவை வெளியிட்ட சாம்சங், மிகவும் சவாலான சுற்றுச்சூழல்களிலும் திறனுடன் இந்த ஹார்ட் டிஸ்க் வேலை செய்யும் என விளம்பரப்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் முதல் பார்வையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சாம்சங் ஷீல்டின் படங்களைப் பார்த்த இணையவாசிகள் இந்த ஹார்ட் டிஸ்க்கின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதுவே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக இந்த ஹார்ட் டிஸ்க் ரின் டிடர்ஜென்ட் சோப்பை ஒத்திருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆம், நீங்கள் படித்தது சரிதான். ரின் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு டிடர்ஜென்ட் பிராண்ட்.
“மிவும் கரடுமுரடான தோற்றத்துடன், அனைத்து சூழல்களிலும் திறனுடன் செயல்படும். T7 ஷீல்டு PSSD ஐப் பயன்படுத்தி, உங்கள் தரவுகளைப் பாதுகாக்கவும், மிகவும் சவாலான சுற்றுச்சூழல் நிலைகளிலும் கூட செயக்திரனில் எந்த தொய்வும் இல்லாமல் செயல்படும் ,” என்று சாம்சங்கின் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விளம்பரங்களிலிருந்த ஹார்ட் டிஸ்க்கின் தோற்றம் குறித்து “இது ரின் டிடர்ஜென்ட் சோப் விளம்பரம் என்று நான் நினைத்தேன்” என்று பயனர்கள் கமெண்ட் செய்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.