அமமுக – ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!

அமமுக – ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் உத்வேகம் பெற்றுள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற  கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

அமமுக – ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் உத்வேகம் பெற்றுள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற  கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது..

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர்.
அமமுக – ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமைந்த கூட்டணி.

இந்த கூட்டணியால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 மக்களவைத் தொகுதிகளில் மிகவும் வலுவாகி விட்டோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உத்வேகம் பெற்றுள்ளோம்.

அனைத்து பகுதிகளிலும் இரு இயக்கங்களின் தொண்டர்கள் இணைந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருகுடையின் கீழ் ஒருங்கிணையும் போது  திமுக ஆட்சியை அகற்ற முடியும். ஒருசில சுயநலவாதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.