“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட்” – செல்லூர் ராஜூ

“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்…

“அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “24 ஆம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஒ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.

30ஆம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை.

கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம். எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம், இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம்.” என்று கூறினார்.

சமீப நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.