29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – அமைச்சர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குலுக்கல் முறையில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வாஷிங்மெஷின், சைக்கிள், மிக்ஸி, குக்கர் பரிசுகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரை மாவட்டத்தில் 62% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு முகாம் மூலம் நாளை மாவட்டம் முழுவதும் 1.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில், மதுரை மாவட்டம் ஒரு முன் மாதிரியான மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 3வது அலையை தடுக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் செயல்படுத்துவார். திமுக அறிவித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

வருவாய்த்துறையை போல பத்திரப்பதிவு துறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் முதல் நிலை பணியாளர்கள் ஒரு இடத்தில் ஒரு ஆண்டு மட்டுமே பணியாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2ஆம் நிலை பணியாளர்கள் ஒரு இடத்தில் 2 ஆண்டுகளும், 3ஆம் நிலை பணியாளர்கள் ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வணிக வரித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபாவளி விற்பனை முறைகேடுகளை கண்காணிக்க 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.” என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

பல முனை போட்டி அதிமுகவுக்கு சாதகம்தான் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

நடிகரின் காரில் மோதிய போதை இளைஞர் சீரியஸ்

Ezhilarasan

உதயநிதி பற்றிப் பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது- அமித்ஷா விமர்சனம்!

Jeba Arul Robinson