முக்கியச் செய்திகள் தமிழகம்

கையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் 4வது இடத்தில் உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் 7 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள 2,660 வீடுகள் தோறும் நேரில் சென்று பரிசோதித்து யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை. கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் பொது மக்களையும் பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அனைத்து மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முதல்வர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கொரோனா மட்டுமில்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் 3,929 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 33,418 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: அமைச்சர் பொன்முடி

Arivazhagan Chinnasamy

கோவாவில் பாஜகவில் இணையும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

Mohan Dass

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் – உயர்நீதிமன்றம் காட்டம்

EZHILARASAN D