உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் இடி மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே இடி மின்னலுடன் மழை…

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் இடி மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. குறிப்பாக மகாராஜ் கஞ்ச், ரே பரேலி, சாந்த் கபீர் நகர், அலகாபாத், பல்ராம்பூர், ஜான்சி மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த து. அப்போது கிராமப்பகுதிகளில் மின்னல்தாக்கி 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று அதிகாரிகள் கூறினர். அதிகபட்சமாக பிரக்யாராஜ் மாவட்டத்தில் 14 பேர் உயிரிழந்த தாக அதிகாரிகள் கூறினர்.

மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று உபி முதலமைச்சர் யோகி ஆதித்தியா நாத் அறிவித்துள்ளார். இடி, மின்னல், மழை காரணமாக கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதே போல ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஜெய்ப்பூரில் அமீர் அரண்மனை முன்பு சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.