“மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம்” – அமைச்சர் ரமேஷ்!

மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது சேகர்பாபு பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1,111 கிலோ தங்கம் மீட்டு உள்ளோம். சூரியனை வானத்திலே காணலாம், சந்திரனை நட்சத்திர நடுவில் காணலாம்.கடவுளை தூணிலும் காணலாம், துரும்பிடும் காணலாம். எங்களுடைய தலைவரை நாங்கள் கொண்டு வந்த திட்டங்களில் பார்க்கலாம். திமுக ஆட்சியில் 4,330 கோவில்கள் விதியாய் முளைத்து குடமுழுக்கு கண்டுள்ளது. 3000 கோவிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என சேகர்பாபு விமர்சனத்திற்கு 400 கோடி ரூபாய் செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ளது.

அமைச்சர் ரமேஷ்:

மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லை. தேவையில்லாத திட்டங்களை தான் தடுத்து நிறுத்தி உள்ளது.

சேகர்பாபு:

19000 கோவிலுக்கு விளக்கேற்றி வைத்த அரசு திமுக. 09- கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூஜை பொருட்கள் வழங்கிய அரசு திமுக. கல்வி ஊக்கத்தொகை வழங்கிய அரசு திமுக. 10,000 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். நீங்கள் 106 அறிவிப்புகளை அறிவித்துள்ளவர்கள். எத்தனை ஆண்டுகளில் இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுகிறீர்கள் என்று பார்ப்போம். 425 கோவில்களுக்கு அரசு நிதி முதலமைச்சர் வழங்கி உள்ளார். 1000 ஆண்டுகளுக்கு மேலான 90 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு கொண்டுள்ளோம். நான்கு குளங்களை புதிதாக கட்டியுள்ளோம். 282 குளங்களை புதுப்பித்துள்ளோம். 280 சிறு குளங்களை புதுப்பிப்போம் என தெரிவித்துள்ளீர்கள். நாங்கள் புதுப்பித்துள்ள குளங்களை சேர்த்து புதுப்பிக்க உள்ளீர்களா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

சொத்துக்களை பத்திரமாக பாதுகாக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி நிகழ்ந்தது. வள்ளலார் சர்வதேச மையம் திமுக அரசு கொண்டுவந்தது. அதனை இந்த அரசு முடக்கியுள்ளது. இந்த வள்ளலார் சர்வதேச மையத்தை இந்த அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும். சொத்துக்களை பத்திரமாக பாதுகாக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி நிகழ்ந்தது. வள்ளலார் சர்வதேச மையம் திமுக அரசு கொண்டுவந்தது. அதனை இந்த அரசு முடக்கியுள்ளது. இந்த வள்ளலார் சர்வதேச மையத்தை இந்த அரசு முன்னெடுத்து நடத்த வேண்டும். காலை உணவு திட்டம் வழங்கிய முதலமைச்சர் பெயரை சொல்வார்கள் மாணவர்கள். எங்களுக்கு இந்த இடைவேளை முடிந்து தொடர் வேலை வரும். மீண்டும் வருவோம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.