ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரியை…

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில
தினங்களாக கோடை வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்து வருகிறது. காலை 10 மணி முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே, ஆரணி நெடுஞ்சாலை ஓரங்களில் தர்பூசணி விற்பனை அதிகளவில் நடை பெற்று வருகிறது. எப்போதும் விட கடந்த சில தினங்களாக விற்பனை அதிகரித்து உள்ளது.

பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து காத்து கொள்ள அதிக அளவில் தர்பூசணி
பழங்களை அங்கேயே உண்டு மகிழ்வதுடன் வீடுகளுக்கும் ஆர்வமுடன் வாங்கி
செல்கின்றனர்.

—-ம. ஸ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.