பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.
இப்படத்தை தொடர்ந்து, ‘துரந்தர் படத்தின் 2-ம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளது. இப்படத்திற்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என்னவொரு படம், ரன்வீர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” எனப் பதிவிட்டுள்ளார்.







