ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னேரி அகஸ்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அகஸ்தீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து கோயில் உள்ள கொடி மரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மற்றும் கலச நீர் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை நடைபெற்றுது.
இதை அடுத்து பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 3-ம் தேதியும், தெப்ப திருவிழா 6 ஆம் தேதியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்கிடையே கொடியேற்ற விழாவில் சோழவரம், மீஞ்சூர், மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துனர். மேலும் இவ் விழாவில் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் ராஜசேகர் கலந்து கொண்டுள்ளனர்.
—–கோ. சிவசங்கரன்







