கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியின் போது அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு மாத காலத்தில் அவ்வப்போது கர்நாடகா வந்து பல நல திட்டங்களை திறந்து வைத்துள்ளார். மேலும் பாஜக தரப்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Karnataka Congress Chief DK Shivakumar was seen throwing Rs 500 currency notes on the artists near Bevinahalli in Mandya district during the ‘Praja Dhwani Yatra’ organized by Congress in Srirangapatna. (28.03) pic.twitter.com/aF2Lf0pksi
— ANI (@ANI) March 29, 2023
இதே போல் இழந்த ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாகன பரப்புரையில் அக்கட்சியின் மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







