சீன ஆய்வுப் பணியின் மூலம், நிலவில் நீர் வளத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனா 2020 இல் நிலவிலிருந்து மாதிரிகளை மீட்டெடுத்தது. அந்த மாதிரிகளில் பளபளப்பான, பல வண்ண கண்ணாடி மணிகள் இருந்தன. நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் பங்கேற்ற ஹெஜியு ஹுய்யின் கூற்றுப்படி, தண்ணீரின் ஒரு சிறிய பகுதியே இந்த கண்ணாடி மணிகள் என தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மணிகளில் பில்லியன்கள் அல்லது டிரில்லியன்கள் இருப்பதாகக் குழு மதிப்பிடுகிறது. இது கணிசமான அளவு தண்ணீரை வைத்து இருக்கலாம், இருப்பினும் அதைப் பிரித்தெடுப்பது சவாலானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் பரப்பில் ஹைட்ரஜனின் தொடர்ச்சியான தாக்குதல் இந்த மணிகள் தொடர்ந்து தண்ணீரை உற்பத்தி செய்ய அனுமதித்தது. இந்த ஆராய்ச்சி 32 கண்ணாடி மணிகளை அடிப்படையாகக் கொண்டது. எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் இந்த கண்ணாடி மணிகள், விண்வெளி கற்களால் உருகும் பொருள் குளிர்ச்சியின் விளைவாகும்.
ஹுய்யின் கூற்றுப்படி, “நிலவின் மேற்பரப்பில் நீரை நிரப்ப முடியும்.” என கூறப்படுகிறாது. இது நடைமுறைக்கு சாத்தியமா என்பதை மதிப்பிடுவதற்கும், அப்படியானால், தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானதா என்பதை மதிப்பிடுவதற்கு, கூடுதல் ஆராய்ச்சி தேவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றானர்.