போரினால் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க மத்திய அரசு இறுதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தனர். ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், போரினால், உக்ரைனில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை முடிக்காமல் இந்தியா திரும்பிய மாணவர்கள், மருத்துவ கல்லூரியில் சேராமல், எம்.பி.பி.எஸ் படிப்பை முடிக்க மத்திய அரசு இறுதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : அதிமுக பொதுச்செயலாளர்களாக இருந்தவர்களின் பட்டியல் இதோ!
உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்த மத்திய அரசு, “சம்மந்தப்பட்ட மாணவர்கள் இந்திய மருத்துவ பாடதிட்டத்தின்படி தேர்வு எழுத வேண்டும். அதேபோல் செய்முறை படிப்பை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் பயில ஏற்பாடு செய்யப்படும். மேலும் தேர்வை முடித்த பின்னர், அந்த மாணவர்கள் இரண்டாண்டு கட்டாயம் சுழற்சி முறையிலான மருத்துவ பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.