காவிரியின் உபரிநீர், தருமபுரியின் உயிர்நீர் என்ற முழக்கத்தோடு, தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர், அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். ஒகேனக்கலில் இன்று நடை பயணத்தை தொடங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் 200 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. தண்ணீரை சேமித்து வைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு டாஸ்மாக் வருமானம் மட்டும் ரூ.3000 கோடி. இந்நிலையில் தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி சாதி மதம் பார்க்காமல் 30 ஆயிரம் மக்களிடம் உபரி நீர் திட்டம் செயல்படுத்த கையெழுத்து பெறப்பட்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவோ போராடியும் அத்திட்டத்தை நிறைவேற்றவே இல்லை, அதற்கான அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது காலநிலை மாற்றம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது இதனால் பெரிய வறட்சி ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். வரலாறு காணாத வெள்ளம் கண்ட ஐரோப்பாவில் தற்போது குடிக்க கூட தண்ணீர் இல்லை. அதனால் ஐரோப்பில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டுக்கும் வரும்.
நான் அமைதியாக சென்று உபநீர்த்திட்டம் செயல்படுத்த கோரி மக்கள் இயக்கமாக வருகிறேன் இதில் அரசியல் கிடையாது. போராட்டம் என்று அறிவித்தால் தர்மபுரியில் ஒரு வாகனம் கூட செல்லாது. உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என அன்பாகவும் அமைதியாகவும் கேட்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக தர்மபுரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒடுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது பாமகவின் கோரிக்கை மட்டுமல்ல விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், என அனைவரின் கோரிக்கையும் இது தான். இது பொது பிரச்சனை ஆகையால் இதற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.