சோனாலி போகத் கொலை செய்யப்பட்டரா? புதிய திருப்பம், உதவியாளர்கள் கைது

கோவாவில் இரவு கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட பாஜக பெண் பிரமுகர் சோனாலி போகத் மர்மமான முறையில் இருந்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.…

கோவாவில் இரவு கேளிக்கை விருந்தில் கலந்து கொண்ட பாஜக பெண் பிரமுகர் சோனாலி போகத் மர்மமான முறையில் இருந்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத் மர்மமான முறையில் மரணம் அடைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை கோவாவில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.நடிகையான சோனாலி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததோடு ஏராளமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோனாலி, 2019-ம் ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.சினிமா ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற சோனாலி இரவு விருந்தில் கலந்து கொண்டபோது மர்மமான முறையில் இறந்தார். சோனாலியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை என்று ஹரியானா டிஜிபி தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.சோனாலிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை ஏற்க முடியவில்லை, அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்தார். இந்த மரணம் குறித்து சிபிஐ மூலம் முழுமையாக விசாரிக்கவேண்டும் என அவரது சகோதரி தெரிவித்தார்.மேலும் இறப்பதற்கு முன் தமக்கு எதிராக ஏதோ சதி நடப்பது போன்று உணர்கிறேன் என சோனாலி, தாயாரிடம் தெரிவித்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். அவரது மரணத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வெளியான நிலையில், தனது சகோதரி அவரின் இரண்டு கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காவல்துறையில் புகாரளித்தார் அவரது சகோதரர் ரிங்கு.

சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உட்பட முக்கியப் பொருள்கள் காணாமல் போயிருக்கின்றன, அவரது உணவில் எதோ கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தனது புகாரில் ரிங்கு சிங் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில் அவரது உடலில் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து பாஜக உள்ளூர் தலைவர் ஒருவரும், சோனாலியின் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா காங்கிரஸ் கட்சி இந்த மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் ஏன தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன் பேசிய கோவா முதல்வர் பிரோமோத் சாவந்தும், அவர் மாரடைப்பில் இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.