ரசிகர்கள்தான் எனது எனர்ஜி: விக்ரம்

ரசிகர்கள் தான் தனது எனர்ஜி என கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

ரசிகர்கள் தான் தனது எனர்ஜி என கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், துருவ் விக்ரம், மீனாட்சி, மிருணாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி, விக்ரமுடன் நடித்ததன் மூலம் தனது கனவு நனவாகி உள்ளதாக கூறினார். கோப்ரா படத்தை எல்லோரும் திரையரங்குகளில் சென்று பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் திரையரங்குகளில் நிறைய நாட்கள் ஓடுவது பெரிய விஷயமாக உள்ள நிலையில் அஜய் ஞானமுத்துவின் உழைப்பிற்காக நன்றாக ஓடும் என்று துருவ் விக்ரம் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், “படத்திற்காக பல்வேறு நகரங்களுக்கு சென்றோம். எனது படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்தது புதிய எனர்ஜியை கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்புக்கு நன்றி. ஒவ்வொருஊரையும் மிகவும் ரசித்தேன். நிச்சயம் படம் உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள் நன்றி” என்றார்.

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.