மத்திய கிழக்கில் போர் பதற்றம் – வான்வழிப் போக்குவரத்து முடக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் எதிரொலியாக, பாதுகாப்பு கருதி பல நாடுகள் தங்கள் வான் எல்லைகளை மூடி வருகின்றன.

வான்வழிப் போக்குவரத்து முடக்கம்:

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக முக்கிய சர்வதேச நாடுகள் தங்களது வான் எல்லைகளை (Airspace) உடனடியாக மூடுவதாக அறிவித்துள்ளன. வான்வழித் தடம் மூடப்பட்டதால், அந்தப் பாதையில் செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள இடங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி வருகிறது. இந்த மோதல் வான்வெளியில் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், அண்டை நாடுகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளன.

வான்வெளியை மூடியுள்ள நாடுகளின் பட்டியல்:

இதுவரை அதிகாரப்பூர்வமாக மற்றும் தற்காலிகமாக வான்வெளியை மூடியுள்ள நாடுகள் மற்றும் நகரங்களின் விவரம்:

ஈரான்
இஸ்ரேல்
பஹ்ரைன்
தோஹா (கத்தார்)
ஐக்கிய அரபு அமீரகம்
ஜோர்டான்
கத்தார்
அபுதாபி
குவைத்

இந்த திடீர் மாற்றத்தால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பயண விவரங்களை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.