“நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக…

நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள்,  வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் மனைவியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து,  வாக்களித்தார்.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   “வாக்குரிமை உள்ள அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.  நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான்” என தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.