தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விவிஎஸ் லக்ஷ்மணை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், டிராவிட் பதவி வகித்த தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு புதிய தலைவரை நியமிப் பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷமணிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இப்போது அவருடன் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிறந்த டெஸ்ட் வீரரான லக்ஷ்மண், இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி 8781 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்-லில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.