புதுப்பள்ளி உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளா உள்ளிட்ட காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து அவர் தொகுதியான புதுப்பள்ளி காலியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி…

கேரளா உள்ளிட்ட காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து அவர் தொகுதியான புதுப்பள்ளி காலியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் ஜெய்க் சி.தாமசும், பா.ஜனதா சார்பில் லிஜின் லாலும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடமும் காலியாக உள்ளது.
இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை 8ஆம் தேதி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.