மூச்சுக்காற்றின் மூலம் குடல் புற்றுநோயை கண்டறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெரியால் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
பெரியாா் பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை சாாபில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான பயிலரங்கம் நடத்தப்படுகிறது. பயிலரங்கினைத் தொடங்கி வைத்து துணைவேந்தா்இரா.ஜெகநாதன் உரையாற்றினார்.
புற்றுநோய் போன்ற அரிதான நோய்களில், நோய் பாதிப்புகளை கண்டறியும் கருவிகளால் நோயாளிகள் கடுமையான பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குடல் புற்றுநோயை உறுதி செய்வதற்கான நடைமுறை மற்றும் சோதனைகள் மிகக் கடுமையாக உள்ளன. இதனால் நோயாளிகள் கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இதனை போக்கும் வகையில், கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் கே.தங்கவேல் தலைமையிலான குழுவினா்மூச்சுக் காற்றின் மூலம் குடல் மற்றும் வயிறு சாா்ந்த அனைத்து வகை புற்றுநோயையும் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளனர். இதேபோல் மாாபக புற்றுநோய் பாதிப்புகளையும் ஆரம்பக் கட்டத்திலேயே மிக எளிதாக கண்டறிவதற்கான முயற்சிகளில் பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.







