“மோடிக்கு வாக்களியுங்கள்!” திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் – போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை அச்சிட்ட மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், …

திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை அச்சிட்ட மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில்,  இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில்,  2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : “கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

இதற்கிடையில், கர்நாடகாவில் கடபா தாலுகாவின் அலந்தாயா கிராமத்தில் வசித்து வருபவர் சிவபிரசாத்.  இவர் ஏப்ரல் 18 -ஆம் தேதி தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை பலருக்கும் வழங்கியுள்ளார் . அந்த திருமண அழைப்பிதழில் “மோடியை மீண்டும் பிரதமராக்குவது,  திருமணமான தம்பதிகளுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசாக இருக்கும்.  தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக மோடி மீண்டும் பிரதமராகவே நீடிக்க வேண்டும் எனவே அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என்று பிரதமர் மோடி புகைப்படத்தை அச்சடித்து இருந்தார்.

இந்த அழைப்பிதழை பார்த்த தேர்தல் அதிகாரிகள் இதனை அச்சிட சிவபிரசாத் அனுமதி வாங்கி இருக்கிறாரா? என்று விசாரணை தொடங்கினார்.  ஆனால்,  அவர் அதற்கான அனுமதியை பெறவில்லை.  இதனையடுத்து,  சிவபிரசாத் மற்றும் அழைப்பிதழ் அச்சடித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் உப்பினங்காடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து,  புகாரின்பேரில் உப்பினங்காடி காவல்துறையினர் மணமகன் சிவபிரசாத் மற்றும் திருமணம் பத்திரிக்கையை அச்சடித்த நபர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.