முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி

செஸ் ஒலிம்பியாட் ஜோதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 44வது சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, முதல் முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் கடந்த…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

44வது சர்வதேச சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, முதல் முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் கடந்த ஜூன் 19ம் தேதி டெல்லியில் தொடங்கிவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்திடம் ஜோதியை பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

முதல் ஆண்டு என்பதால், இந்த ஜோதி தொடர் ஓட்டம் இந்தியாவுக்குள் மட்டும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 76 மாநகரங்களுக்கு இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்ற இந்த ஜோதி, இன்று விழா தொடங்கிய நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வந்து சேர்ந்தது.

அதனை விஸ்வநாதன் ஆனந்த் மேடைக்கு எடுத்து வந்து முாதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.

பின்னர் அந்த ஜோதி, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் வழங்கப்பட்டது.

அந்த ஜோதி, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய ஜோதியோடு சேர்க்கப்பட்டு அதன் ஓட்டம் முடித்துவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.