PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்திய அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி ஒரு மனிதனை மாண்புடையவனாக்கும். கற்றல் மட்டுமே அவனது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உயர்த்தும். அதனால்தான் கற்கை…

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்திய அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி ஒரு மனிதனை மாண்புடையவனாக்கும். கற்றல் மட்டுமே அவனது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உயர்த்தும். அதனால்தான் கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என ஔவைப் பாட்டியின் வாக்கு தொடங்கி பல அறிஞர்களின் கூற்றுகள் வரை “படி” என்பது தான்.

21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கையாளும் நிலைக்கு நாடுகள் வளர்ந்துள்ள நிலையில் கல்வியறிவை உயர்த்துவது குறித்து மத்திய அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கல்வி கற்க சூழல், குழ்ந்தை தொழிலாளர் முறை, வறுமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை போன்ற பல காரணங்கள் தடையாக இருக்கின்றன.

சமூக, பொருளாதார பிரச்சனைகளையும் தாண்டி மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கல்வி கற்க பல தடைகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த பார்வை மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த தேவ்ஷ்ரி போயர் என்பவர் பார்வை மாற்றுத் திறனாளி. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் இந்திய அரசியல் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் “ முனைவர் பட்டம் பெற்றது எனக்கு பெரும் சிரமமாக தெரியவில்லை. ஏனெனில் எனது குடும்பத்தினர் அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். என்னிடம் 8ம் வகுப்பு முதல் தற்போது வரை அனைத்து புத்தகங்களும் பத்திரமாக இருக்கின்றன. அதனை அவர்கள் எனக்கு சத்தமாக வாசித்துக் காண்பிப்பார்கள். மேலும் யூடியூப் மூலமும் நிறைய கேட்டு கற்றுக் கொண்டேன். எனது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் தான். எனக்கு பேராசிரியர் ஆவதே விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.