தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் போதை பொருள் பயன்பாட்டிற்காக வருவதாக விஜய பிரபாகரன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தேனி மாவட்டத்திற்கு கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், தேனி மாவட்டத்தில் கிடைக்கும்
கஞ்சாவை பயன்படுத்துவதற்காக தனது நண்பர்கள் தேனி மாவட்டத்திற்கு வருவார்கள் என்றும், தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் கஞ்சா பயன்படுத்துவதற்கே வருகிறார்கள் என கூறினார்.
இது குறித்து செய்தியாளர்கள், தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கஞ்சா பயன்படுத்துவதற்காக வருகிறார்களா என கேட்ட போது, தான் அப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக கூற வில்லை என சட்டென்று பின்வாங்கினார்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வரும்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் விருப்பப்பட்டால் அவர் வருவார் என
கூறினார்.
ம. ஶ்ரீ மரகதம்







