புதிய ரக ஏவுகணை: சோதனை வெற்றி

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரக ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. காஷ்மீர் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில்,…

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ரக ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் புதிய ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

குறைந்த தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் வல்லமை கொண்டதாகும்.

ஒடிசா மாநில கடல் பரப்பில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. முன்னதாக கடந்த 9 முன்னர்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பிரித்வி 2 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நடுத்தர வகை ஏவுகணையான பிருத்வி- 2 நேற்று இரவு ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்றது.

500 கிலோ வெடிபொருட்களுடன் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் பெற்றவை ஆகும். எனினும் 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும்.

https://twitter.com/rajnathsingh/status/1540256546353192961

10 நாட்களுக்குள் தொடர்ந்து 2 ஏவுகணை சோதனையை இந்திய வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது அண்டை நாடுகளுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.