‘லால் சலாமின்’ முதல் ரிவியூ கொடுத்த விஷ்ணு விஷால்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படம் அனைவருக்கும் சிறந்த படமாக அமையும் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் …

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படம் அனைவருக்கும் சிறந்த படமாக அமையும் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். படம் பிப்.9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதிகட்ட வேலைபாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்ததாகவும், படம் கண்டிப்பாக அனைவருக்கும் இது சிறப்பான படமாக அனையும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் ஒரு அங்கமாக இருப்பது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/TheVishnuVishal/status/1747892111264076281

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.