முக்கியச் செய்திகள் தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் விபத்து!

விருதுநகர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாடியூர் கிராமத்தில், ராதா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நடந்த வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பட்டாசு ஆலையின் ஒரு அறையில் ஆதி லட்சுமி, செந்தில், சுந்தரபாண்டியன், முத்துமாரி ஆகியோர் பட்டாசினுள் மருந்து செலுத்தி வந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 4 பேருக்குக் கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து. அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையின் தீக்காயப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

நாக்பூரில் இயங்கி வரும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு துறையின் அனுமதியோடு இந்த பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. மேலும் சட்டவிரோதமாக மரத்தடியிலும், ஆலையின் அறைகளைவிட்டு வெளி புறத்திலும் பட்டாசுகள் தயார் செய்யப்படுவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இந்த வெடிவிபத்தில், ஆலையின் ஒரு அறை தரைமட்டமாகிவிட்டது.

Advertisement:

Related posts

விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

Karthick

பிரதமர் வருகை: போக்குவரத்து மாற்றம்

Niruban Chakkaaravarthi

இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி!

Karthick