முக்கியச் செய்திகள் தமிழகம்

முதியவரை தாக்கிய நடத்துனர்: மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை!

முதியவரை அரசு பேருந்து நடத்துனர் தாக்கிய விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்துள்ளது.

 கடந்த 11ம் தேதி சித்தோட்டை சேர்ந்த கணேசன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து கவுந்தபாடி வழியாக ஈரோடு சென்ற அரசு பேருந்தில் பயணித்தார். பேருந்தில் பயணிகளுக்கு நடத்துனர் குமார் டிக்கெட் வழங்கி வந்தார். அந்த சமயத்தில் கணேசன் டிக்கெட் எடுத்தபிறகு நடத்துனரிடம் சில்லறை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.காலையிலேயே குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாயா என்று கேட்டதோடு, முதியவரை அவர் கடுமையாகத் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  வீடியோ வைரலான நிலையில் அரசு பேருந்து நடத்துனர் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் முதியவரை நடத்துனர் தாக்கிய விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்துள்ளது. இதுபற்றி அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குநருக்கு மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Advertisement:

Related posts

ஷாங்காய் பட விழாவில் நயன்தாராவின் கூழாங்கல்!

Ezhilarasan

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: முதல்வர்!

”குடிமராமத்து பணி: இணையத்தில் வெளியிடுக”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

Jayapriya