தமிழகத்தில் தரமற்ற சானிடைசர் விற்பனை: தண்டனை என்ன தெரியுமா?

தரமற்ற கலப்பட மற்றும் போலி சானிடைசர் விற்பனை செய்து வந்ததால் 82 நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்த பிறகு முகக்கவசம், சானிடைசர்  பயன்பாடு அதிகமானது, இதனால் அதன் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருந்து கடைகளில் விற்கப்படும் சானிடைசர் தரமானதாக…

தரமற்ற கலப்பட மற்றும் போலி சானிடைசர் விற்பனை செய்து வந்ததால் 82 நிறுவனங்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்த பிறகு முகக்கவசம், சானிடைசர்  பயன்பாடு அதிகமானது, இதனால் அதன் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மருந்து கடைகளில் விற்கப்படும் சானிடைசர் தரமானதாக உள்ளதா என்பதை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்ககம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

இதனிடையே 48 நிறுவனங்கள் தரமற்ற சானிடைசர் விற்பதாகவும், 32 கலப்படம் செய்த சானிடைசர் விற்பதாகவும், 2 நிறுவனங்கள் போலி சானிடைசர் விற்பதாகவும் மொத்தம் 82 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் 32 நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் மீது விரைவில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

நீதிமன்றத்தில் தரமற்ற, கலப்படமான சானிடைசர் விற்பது நிரூபணமானால் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்ட விதிகள் 1945 -ன் கீழ் தண்டனை வழங்கப்படும். தரமற்ற சானிடைசர் விற்றால் அந்த சட்டத்தின் 27டி பிரிவின் கீழ் ஆயிரம் ரூபாய் 20 அபராதமும் 1 – 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். கலப்பட சானிடைசர் விற்றால் பிரிவு 27சி கீழ் மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும். போலி சானிடைசர் விற்றால் பிரிவு 27பி1 கீழ் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.