#Virudhunagar | அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

விருதுநகர் சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பரிசுகள், இனிப்புகள் வழங்கினார். மேலும்…

#Virudhunagar | Chief Minister M.K. Stalin inspects the government archives!

விருதுநகர் சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சூலக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், பரிசுகள், இனிப்புகள் வழங்கினார். மேலும் காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனப் பேரணி மேற்கொண்டார்.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்து அவர் கையசைத்தார். திமுக தொண்டர்கள் கொடுத்த சால்வை உள்ளிட்ட பரிசுகளையும் அவர் பெற்றுக்கொண்டார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் சால்வை, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் “அண்ணே… அண்ணே…” என்றும் – குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்” என பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.