”விராட் கோலியும் எனக்கு மகன் தான்” – கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய வெ.இ வீரரின் தாய்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியும் எனக்கு மகன் தான் என்று ஆனந்த கண்ணீருடன் கூறிய வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்திய அணியின்…

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியும் எனக்கு மகன் தான் என்று ஆனந்த கண்ணீருடன் கூறிய வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எங்கு விளையாடினாலும், அவரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வரும் விராட் கோலியை சந்தித்து ஏராளமானோர் தங்கள் அன்பை வெளிக்காட்டி வருகின்றனர். விராட் கோலியின் ஒரு ஆட்டோகிராஃப், அவருடன் ஒரு செல்ஃபி கூட வெஸ்ட் இண்டீஸ் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வாவின் தாய், விராட் கோலியின் ஆட்டத்தை நேரில் பார்ப்பதற்காக ட்ரினிடாட் மைதானம் வந்தார். இதனை களத்திலேயே ஜோஷ்வா சில்வா விராட் கோலியிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பின், விராட் கோலியை சந்திப்பதற்காக இந்திய வீரர்களின் பேருந்து முன் ஜோஷ்வா சில்வா மற்றும் அவரது தாய் காத்திருந்தனர்.

இதனையறிந்த விராட் கோலி, உடனடியாக அவர்களை சந்தித்தார். அப்போது விராட் கோலியை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார் ஜோஷ்வா சில்வாவின் தாய். அதேபோல் விராட் கோலியின் ஆட்டத்தை பாராட்டியதோடு, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா எடுத்தார். இந்த சந்திப்புக்கு பின் அவரின் ஆனந்த கண்ணீர் சிந்தியது இது சுற்றியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்கு பின் ஜோஷ்வா சில்வாவின் தாய் கரோலின் பேசுகையில், நானும், ஜோஷ்வாவும் விராட் கோலியின் தீவிர ரசிகர்கள். இந்த காலத்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். எங்கள் மண்ணில் அவர் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் ஜோஷ்வாவும் களத்தில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.