‘ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல’ – சதீஷின் ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் டீசர்!

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற சதீஷின் சீரியஸ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் நாயகனாக நடித்த ’நாய்…

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற சதீஷின் சீரியஸ் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் நாயகனாக நடித்த ’நாய் சேகர்’ மற்றும் ‘ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது  ’வித்தைக்காரன்’ திரைப்படத்தில்  நடித்துள்ளார்.

இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.

இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சதீஷ் முதன்முறையாக சீரியஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இந்தப் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இதில் வரும் ‘ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல’ வசனம் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.