நார்வே நாட்டு நடன குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி..!

இந்திய அணி வீரர் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான ‘குயிக் ஸ்டைலை’ சந்தித்து அவர்களுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்…

இந்திய அணி வீரர் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான ‘குயிக் ஸ்டைலை’ சந்தித்து அவர்களுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடந்து வந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் நேற்று இந்தியா கைப்பற்றியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது. இருப்பினும் இந்திய அணி முன்னிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் 186 ரன்கள் அடித்த விராட் ஹோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

https://twitter.com/imVkohli/status/1635603400149835776?s=20

‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான தொடர் முடிந்த பின்னர் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான ‘குயிக் ஸ்டைலை’ சந்தித்து அவர்களுடன் இணைந்து Ishq Ho Gaya என்ற டலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் ‘குயிக் ஸ்டைல்’ நடனக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விராட் கோலி, “நான் மும்பையில் யாரைச் சந்தித்தேன் என்று யூகிக்கவும்” என்றும் தனது பதிவில் எழுதியுள்ளார். தற்போது விராட் கோலியின் இந்த பதிவும், நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து கோலி டான்ஸ் ஆடிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.