ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில்…

ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் 40 வது முறையாக அரைசதம் அடித்தார். அவர், 52 ரன்களை எடுத்த போது, ஐபிஎல் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இரண்டாவது இடத்தில் உள்ள சுரேஷ் ரெய்னா 5 ஆயிரத்து 448 ரன்களை எடுத்துள்ளார். ஷிகர் தவான், டேவிட் வார்னர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.