அமர்நாத் குகைக்கோயில் பயணத்துக்கான முன்பதிவு தற்காலிக நிறுத்தம்!

கொரோனா பரவல் காரணமாக, அமர்நாத் குகைக்கோயில் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலையை ஒட்டியுள்ள, காஷ்மீரின் தெற்கு பகுதியில், 12 ஆயிரத்து 730 அடி உயரத்தில், அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு…

கொரோனா பரவல் காரணமாக, அமர்நாத் குகைக்கோயில் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இமயமலையை ஒட்டியுள்ள, காஷ்மீரின் தெற்கு பகுதியில், 12 ஆயிரத்து 730 அடி உயரத்தில், அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை இந்த பயணத்துக்கு அனுமதிக்க அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பனிலிங்க கோயிலுக்கு புனித பயணம் மேற்கொள்வதற்காக இணையதளம் வழியே செய்யப்படும் முன்பதிவுகள், கொரோனா பரவல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமர்நாத் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.