முக்கியச் செய்திகள் இந்தியா

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனம் திடீரென ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாளை முதல் ஜீலை 15-ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்தே காணப்படும். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

 

மேலும் பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. மாட வீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளைநிற குளிர்ச்சி பெயின்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறும்போது, ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து வருவதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டள்ளதாகவும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் 5 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டம் மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

 

ஆஞ்சநேயர் பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த புத்தகம் பக்தர்களுக்கு விரைவில் கிடைக்க செய்யப்படும் என்றும், தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும் என்றார். மகாராஷ்டிரா நவி மும்பையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக 70 கோடி ரூபாய் செலவில் கோயில் கட்ட நன்கொடையாளர் ஒருவர் முன் வந்துள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும் என்றார்.

புவனேஸ்வரில் புதியதாக கட்டப்பட்ட கோயிலுக்கு இந்த மாதம் 26ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜம்மு சீதன்பேட்டை, அமராவதி ஆகிய இடங்களில் ஏழுமலையான் கோயில்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது..

Saravana Kumar

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

Jeba Arul Robinson

மதிமுக கடந்த தூரமும் கடக்க வேண்டிய பயணமும்

Arivazhagan CM