முக்கியச் செய்திகள் இந்தியா

திரிபுரா புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு

திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக சாஹா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திரிபுராவை சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சிபிஎம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பிப்லப் தேவ் தலைமையில் இந்த தேர்தலை எதிர்கொண்ட பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, 2018ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி பிப்லப் தேப் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்து வந்த பிப்லப் தேப், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் பிற்பகலில் அளித்துள்ளார்.

பிப்லப் தேப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, திரிபுரா புதிய முதல்வராக பாஜக தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மாணிக் சாஹா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிப்லப்தேவ், “நான் ஒருபோதும் திரிபுராவை விட்டு வெளியேற மாட்டேன், திரிபுரா மக்களுக்காக இங்கேயே இருப்பேன்” என்று கூறினார்.

பிப்லப் தேப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திரிபுரா மாநில தலைவராக பிப்லப் குமார் தேப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் பதவிக்கு மாணிக் சாஹாவின் பெயரை பிப்லாப் தேப் முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்

Saravana Kumar

“தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்”: எல்.முருகன்

Halley Karthik

மிகை மின் மாநிலமாக மாறும் தமிழ்நாடு?

Ezhilarasan