ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதைதொடர்ந்து, ’ஷேக் கலீஃபா’வின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீப்பா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ‘ஷேக் கலீஃபா’ மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ‘ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்’ புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழு அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் முகமது அதிபராக இன்று தேர்வு செய்யப்பட்டார்.
https://twitter.com/narendramodi/status/1525481867830509568
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது விரிவான மூலோபாய (strategy) கூட்டாண்மை தொடர்ந்து ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.







