மதுரையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண்களைக் கவரும் வகையில் வின்டேஜ் எனப்படும் பழமையான கார் கண்காட்சி நடைபெறுகிறது.
மதுரை அழகர் கோவில் சாலையோரம் அமைந்துள்ள பாண்டியன் ஹோட்டலில் பேஸ் பவுண்டேசன் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பழமையான கார் கண்காட்சியானது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதில் 1930 முதல் 1960 வரையிலான வாகனங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், இத்தாலி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தயாரான ஆஸ்டின், டார்ஜ், மோரிஸ், பிளைமவுத், சிற்றோன், வோல்க்ஸ்வாகன், பென்ஸ், ஹிந்துஸ்தான், செவர்லெட், எலெகான்ட், ஜீப், உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சார்ந்த கார்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கார் கண்காட்சியானது இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் குடும்பங்களுடன் வந்து பழங்கால கார்களை பார்த்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றன.







