ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது Congress!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், ஜூலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர்…

Vinesh Bhoga will compete in the Haryana elections! Congress released the preliminary list of candidates!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், ஜூலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் அவரது கணவர் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர்.

இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாகவே வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.