விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராகும் சிலைகள்

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து…

திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு
வண்ணங்களில் விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி பின்னர்
வாகனங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது
வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்த மாதம் 18ஆம்
தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தற்போது விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் வண்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவல் ஆண்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவாக இருந்ததாகவும் இந்த ஆண்டு சிலைகள் விற்பனை அதிகமாக இருக்கும் என்ற
நம்பிக்கை இருப்பதாகவும் பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.